Thursday, August 24, 2006

Just for kids

Writer and Blogger Venkatesh (he is currently with Vikatan Publishing) has posted on Katha Books, quoting the Business Line article. He's written about how Katha and Thulika have managed to carve a niche for themselves in the field of Childrens Publishing, bringing folktales of India among children, with beautiful illustrations and excellent production:

கதா, துலிக்காவின் சிறுவர் நூல்கள்

கதாவும் துலிக்காவும் நிறைய சிறுவர் நூல்களை வெளியிட்டு வருகின்றன. மிக அழகான வண்ணப்படங்கள் நிறைந்த புத்தகங்கள் அவை. சமீபத்தில் தி பிசினஸ்லைன் நாளிதழில் அவர்களது புத்தகங்கள் பற்றி வந்த
கட்டுரை இது.
குறிப்பாக இவ்விரு பதிப்பகங்களும் இந்திய வாய்மொழிக் கதைகளை வெளியிடுவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இந்த நூல்கள் பதிப்பிக்கபடுவதால், ஓரளவுக்கு விலையும் குறைவாகவே இருக்கிறது.இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம் உண்மை.
பல வெளிநாட்டுப் பதிப்பங்கள் இங்கே இந்தியாவில் புத்தகங்கள் விற்கும்போது, நினைத்தே பார்க்க முடியாத விற்பனைக் கழிவை விற்பனையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். புத்தக விலையை எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக்கொள், ஆனால் எனக்கான விற்பனைக் கழிவு மட்டும் குறையாமல் இருக்க வேண்டும் என்று பல புத்தக விற்பனை நிலையங்கள் நினைக்கின்றன.
அதனாலேயே பல வெளிநாட்டுச் சிறுவர் புத்தகங்கள் இங்கே உள்ள கடைகளில் சுலபமாகக் கிடைக்கின்றன.இதையும் மீறி, தங்களால் சிறுவர் மார்க்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று இவ்விரு பதிப்பகங்களும் முனைவது நல்ல அறிகுறி.

0 Comments:

Post a Comment

<< Home

< ? indian bloggers # >